என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » அசாம் குடியுரிமை பட்டியல்
நீங்கள் தேடியது "அசாம் குடியுரிமை பட்டியல்"
அசாம் குடிமக்கள் பதிவேடு தொடர்பாக பொதுமக்களிடம் பயத்தை உருவாக்கும் செயல் கடும் கண்டனத்துக்கு உரியது என உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மாநிலங்களவையில் இன்று தெரிவித்தார். #MonsoonSession #NRCBill #RajnathSingh
புதுடெல்லி:
அசாம் மாநிலத்தில் வசிப்போர் குறித்த தேசிய குடிமக்கள் இறுதி வரைவு பதிவேடு சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இந்த பதிவேட்டில் சுமார் 40 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளதற்கு காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.
இந்த விவகாரம் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடும் அமளியை ஏற்படுத்தியது. மாநிலங்களவை கடந்த இரு தினங்களாக ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மாநிலங்களவையில் இன்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
அசாம் குடியுரிமை பட்டியல் தொடர்பான பணிகள், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது 1985ம் ஆண்டு தொடங்கியது. மன்மோகன் சிங் பிரதமராக பதவி வகித்தபோது இது தொடர்பான பணிகள் நடைபெற்று வந்தன.
இதுதொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பின் கீழ் நடந்து வருகிறது. இப்போது வெளியிடப்பட்டுள்ள இந்த பட்டியல் இறுதியானதல்ல. ஒவ்வொருவருக்கும் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும்.
இந்த விவகாரம் தொடர்பாக தேவையற்ற குற்றச்சாட்டுகளை கூறுவது துரதிர்ஷ்டவசமானது. அசாம் குடிமக்கள் பதிவேடு தொடர்பாக பொதுமக்களிடம் பயத்தை உருவாக்கும் செயல் கடும் கண்டனத்துக்கு உரியது என தெரிவித்துள்ளார். #MonsoonSession #NRCBill #RajnathSingh
இந்தியாவுடனான வங்காள தேசம் நாட்டின் உறவை என் ஆர் சி அழித்து விடும் என மேற்கு வங்காளம் முதல் மந்திரி மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். #MamataBanarjee #NRCBill
புதுடெல்லி:
அசாம் மாநிலத்தில் வசிப்போர் குறித்த தேசிய குடிமக்கள் இறுதி வரைவு பதிவேட்டில் 40 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளதை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்துள்ளன. இதனை காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கிறது.
இதற்கிடையே, தலைநகர் டெல்லி சென்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, எதிர்க்கட்சி தலைவர்களை இன்று சந்தித்துப் பேசினார். மேலும், பாராளுமன்ற வளாகத்தில் மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
என்ஆர்சி விவகாரம் வங்காளதேசம் உடனான இந்தியாவின் உறவை அழிக்கும். மேற்கு வங்காளம் மாநிலம் முர்ஷிதாபாத்தை சேர்ந்த 833 பேர் அசாம் சிறைகளில் உள்ளார்கள். பாஜக வாக்கு வங்கி அரசியலை மேற்கொள்கிறது. என்ஆர்சி உலகையே பாதிப்புக்கு உள்ளாக்கும்.
எல்லையை பாதுகாப்பது என்பது மத்திய அரசின் பொறுப்பு. இந்தியாவிற்குள் எத்தனை பேர் ஊடுருவுகிறார்கள் என்பதை மத்திய படைகள் பார்க்க வேண்டும். ஆனால் இப்போது ஊடுருவல்காரர்கள் என்று மக்களை துன்புறுத்துகிறார்கள்.
அசாமிற்கு எதிர்க்கட்சிகள் குழுவை அனுப்ப வேண்டும். முன்னாள் பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹாவை அசாம் செல்ல கேட்டுக் கொண்டுள்ளேன் என மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுக்கும் வகையில் கூறியுள்ளார். #MamataBanarjee #NRCBill
டெல்லி வந்துள்ள மேற்கு வங்காளம் முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று பாராளுமன்ற வளாகத்தில் பாஜக மூத்த தலைவர் அத்வானியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். #MamataBanarjee #Advani #NRCBill
புதுடெல்லி:
வங்காளதேசத்தில் இருந்து வந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில் அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதன் இறுதி வரைவு அறிக்கை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. மொத்தம் உள்ள 3,29,91,384 விண்ணப்பதாரர்களில் 2,89,83,677 பேர் குடிமக்களின் தேசிய பதிவேட்டில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சுமார் 40 லட்சம் பேர் பதிவேட்டில் சேர்க்கப்படவில்லை. தற்போதைய நிலையில் இவர்கள் சட்டவிரோத குடிமக்களாக கருதப்படுவார்கள். எனினும், விடுபட்டவர்கள் தங்கள் பெயர்களை சேர்க்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், குடிமக்கள் பட்டியலில் 40 லட்சம் பேர் விடுபட்டது தொடர்பாக சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரம் பாராளுமன்ற இரு அவைகளிலும் எதிரொலித்தது. மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, அசாம் குடிமக்கள் பதிவேட்டில் சுமார் 40 லட்சம் மக்களின் பெயர் விடுபட்டுப் போனதற்கு மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்தார். இவ்விவகாரம் தொடர்பாக டெல்லி சென்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில், மம்தா பானர்ஜி பாராளுமன்ற வளாகத்தில் பாஜக மூத்த தலைவர் அத்வானியை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதுதொடர்பாக மம்தா பானர்ஜி கூறுகையில், பாஜக தலைவர் அத்வானியை நீண்ட நாள்களாக அறிவேன். இந்த சந்திப்பின் போது அவரது உடல் நலம் குறித்து விசாரித்தேன் என தெரிவித்துள்ளார்.
மேலும், முக்கியமான 14 எதிர்க்கட்சி தலைவர்களையும், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களையும் சந்திக்க உள்ளார் என திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
அசாம் தேசிய குடிமக்கள் பட்டியல் விவகாரம் உள்நாட்டு போருக்கு வழிவகுக்கும் என்று மம்தா பானர்ஜி கூறியிருப்பது கலவரத்தை தூண்டும் விதமாக இருப்பதாக மம்தா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #AssamNRC #MamtaBanerjee
கவுகாத்தி:
வங்க தேசம் நாட்டை சேர்ந்தவர்கள் லட்சக்கணக்கில் இந்தியாவுக்குள் சட்ட விரோதமாக குடியேறி உள்ளனர். அவர்களில் பெரும்பாலனவர்கள் அசாம் மாநிலத்தில் குடியேறியுள்ளனர். அத்தகைய சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்களை கண்டறிய தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்பட்டது.
அசாம் மாநிலத்தில் நேற்று முன்தினம் தேசிய குடிமக்கள் வரைவு பதிவேடு பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் தற்போது அசாமில் உள்ள சுமார் 40 லட்சம் பேரின் பெயர்கள் இடம் பெறவில்லை. அவர்கள் அனைவரும் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று கருதப்படுகிறது.
அந்த 40 லட்சம் பேரில் முஸ்லிம்கள், இந்துக்கள் என அனைத்து தரப்பு மக்களும் உள்ளனர். இது சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதால் அசாம் மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று டெல்லி சென்ற அவர் இது தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினார். ஆனால் மத்திய அரசு தனது முடிவில் இருந்து ஒருபோதும் பின் வாங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தேசிய குடிமக்கள் பதிவு வரைவு பட்டியல் பற்றி விமர்சனம் செய்து பேசியதற்காக மம்தா பானர்ஜி மீது அசாம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. அசாமில் உள்ள பாரதிய ஜனதா யுவமோர்ச் சாணும் அமைப்பு இந்த வழக்கை பதிவு செய்துள்ளது.
அதன் பேரில் மம்தா பானர்ஜி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது. மக்கள் மத்தியில் கலவரத்தை தூண்டி விடுவதாக மம்தா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. #AssamNRC #MamtaBanerjee
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X